Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் தொற்று…. நடைபெறும் தீவிர பரிசோதனை…. பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 153 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் புதுப்பேட்டை அக்ரகாரம் சித்த மருத்துவப் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, மேலும் 152 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வந்த 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |