தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாக கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது இடங்களில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம், இறப்பு வீடுகளில் மக்கள் கூடுவதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வருவதால் மாநிலம் முழுவதும் கட்டுபாடுகள் அமலாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில், கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.