Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இன்னும் எதையெல்லாம் மூட போறாங்களோ…. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்… கொரோனாவினால் ஏற்படும் விளைவு..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக மாமல்லபுரத்திலுள்ள புராதான சின்னகங்களின் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் பொது மக்கள் அதிகமாக கூடும் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூடினால் நோய்தொற்று மேலும் அதிகரிக்கும் என்பதால் நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகம்  மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சர்வதேச சுற்றுலா தலமான நினைவு சின்னங்கள் அதிகமாக உள்ள  மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோவில், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட பாரம்பரிய நினைவு சின்னங்களின்  நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் ஒரு சில பயணிகள் புராதான சின்னங்கள் மூடப்பட்டிருந்த தகவல் தெரியாமல் அங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Categories

Tech |