Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முடிஞ்சிட்டு நெனச்சா மறுபடியும் ஆரம்பிச்சிருச்சு…. வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 807 பேருக்கு தொற்று…!!

செங்கல்பட்டு மாவட்டதில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 807 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 807 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65  ஆயிரத்து 264 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 58  ஆயிரத்து 302 பேர் சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது 6 ஆயிரத்து 263 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Categories

Tech |