Categories
தேசிய செய்திகள்

“அதிகரிக்கும் பாதிப்பு” மீண்டும் ஞாயிறு முழு ஊரடங்கு…. கேரள அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தற்போதைய கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும் என்று கூறியுள்ளார். அதே சமயம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் மூன்றாவது அலை வருவதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், செப்டம்பர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்த சிறப்பான திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |