கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்தன.
அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் சர்த்கம் யாத்திரை நடத்த அம்மாநில ஹைகோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரித்துவார் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை காலை 6 மணி முதல் அக்டோபர் 5ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.