உலகளவில் கொரோனா இரண்டாவது அலையானது முதல் அலையைவிட அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கபட்டு வந்ததால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாகி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா உயிரிழப்பு 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் செலுத்தி கொள்ளாதவர்களே தீவிர தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி செலுத்துவதே உயிரிழப்பை தடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.