Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி…. மீண்டும் அனுப்பப்பட்ட எரிபொருள்…. நன்றி தெரிவித்த இலங்கை தூதரக அதிகாரிகள்….!!

இந்தியா அனுப்பிய எரிபொருள் கொழும்புவிற்கு வந்தடைந்துள்ளது.  

இலங்கை நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் இந்தியா அனுப்பியுள்ள சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருளானது இலங்கையை சென்றடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “Torm helvig சரக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள எரிபொருளானது இலங்கைக்கு வந்தடைந்துள்ளது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியாவை வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த நடப்பாண்டில் பயிர் செய்வதற்கு ஏதுவாக யூரியாவை வழங்க முன்வந்த இந்தியாவிற்கு இலங்கை தூதரக அதிகாரி நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |