போரின் காரணமாக மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 120 நாட்களாக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்தப் போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இப்போரில் ரஷ்யாவிற்கு கட்டுப்படாமல் உக்ரைனும் முழு முயற்சியுடன் போர் செய்து வருகிறது. அதன்படி ரஷ்யாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து ரஷ்யாவுக்கு சொந்தமான 2 வெடிமருந்து கிடங்குகள் மற்றும் சில உபகரணங்களையும் உக்ரைன் அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் நகரத்தின் மீது தற்போது முழு மூச்சோடு போர் நடத்தி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் 20 லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறி ரஷ்யாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். மேலும் உக்ரைன் நாட்டின் புகைப்பட பத்திரிக்கையாளர் மாக்ஸ் லெவின் மற்றும் வீரர் ஒலக்சிய் ஷெர்னிஷோ ஆகிய 2 பேரும் ரஷ்யாவால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல் தெரியவில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது.