Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம்….அமெரிக்க தூதரக அணி வெளியேற்றம்…. அதிரடி நடவடிக்கையில் ரஷ்யா….!!

ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பார்ட் கோர்மன் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1993 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சிதறிய போது அதில் அங்கம் வகித்த உக்ரைன் தனி சுதந்திர நாடாக தன்னை  அறிவித்துக் கொண்டது. தனது எல்லையை ஒட்டி அமைந்துள்ள அந்த நாடானது சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நோட்டா அமைப்பில் இணைந்து உள்ளதால் அது தங்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என  ரஷ்யா கருதுகிறது.

இந்நிலையில் நோட்டாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உக்ரைன் எல்லையருகே  ஏராளமான எண்ணிக்கையில் ராணுவ  படையினரை ரஷ்யா குவித்து  வந்தது. இதன் காரணமாக இரு நாட்டு எல்லைகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் ஓரிரு நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் உக்கிரன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய படைகள் முற்றுகையிட்டால் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் ஏற்படும்  அபாயம் நிலவி வருகிறது. அமெரிக்க தூதரகத்தின் துணைத்தலைவர் பார்ட் கோர்மனை ரஷியா வெளியேற்றியுள்ளது. இதற்கான காரணம் எதுவும்  சொல்லவில்லை. மேலும் வெளியேற்றப்பட்ட பார்ட் கோர்மன்  அமெரிக்க தூதரகத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவர். அவர் அங்கு மூன்று ஆண்டுகளாக பணியாற்றி உள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Categories

Tech |