Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம்…. இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்…. பிரதமர் மோடி வலியுறுத்தல்…!!

இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிபர் புதினிடம்  இந்திய பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக ரஷ்ய  தூதரகம் தெரிவித்தது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார். உக்ரைனில் சுற்றியுள்ள நிலைமையை பற்றி பேசும்போது டான் பாஸ் குடிமக்களுக்கு எதிரான  கீவ்வின்  ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அடிப்படை மதிப்பீடுகளை அடிக் கோடிட்டு காட்டியுள்ளார்.

இந்திய பிரதமர் விளாடிமிர் புதின் விளக்கம் அளித்ததற்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தற்போது உக்ரேனில் தங்கியுள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். 2021ல் டிசம்பரில் புதுடெல்லியில் நடைபெற்ற ரஷ்ய , இந்திய உச்சி மாநாட்டின் பின்னணியில் இருதரப்பு ஒத்துழைப்பின் சில விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு துறைகளின் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளப்பட்டது என ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |