Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம்…. தமிழக அரசின் முயற்சி…. தாயகம் திரும்பிய மாணவி…!!

உக்ரைன் நாட்டில் இருந்து தமிழக மாணவி தாயகம் திரும்பியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் இருக்கும் துவரடிமனையில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ப்ரீத்தி என்ற மகள் இருக்கிறார். இவர் உக்ரைன் நாட்டில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் முயற்சியால் பல மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். அதில் அறந்தாங்கியை  சேர்ந்த பிரீத்தி என்பவர் உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து  பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், போர் நடக்கும் போது நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். அதன்பிறகு உக்ரேனில் இருந்து பேருந்து மூலமாக ருமேனியாவுக்கு கிளம்பினோம். அப்போது கூட்டமாக வந்த சில மர்ம நபர்கள் எங்களை பேருந்தில் ஏற விடாமல் செய்தனர். இதனால் நாங்கள் மிளகுப்பொடி, வத்தல் பொடி போன்றவற்றை அவர்கள் மீது தூவி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றோம். அதன்பிறகு ருமேனியா எல்லைக்கு வந்த பிறகு அங்கிருந்து எங்களை பத்திரமாக மும்பைக்கு அழைத்து சென்றார்கள். அங்கிருந்து சென்னைக்கு வந்து எங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளோம் என கூறியுள்ளார்.

Categories

Tech |