Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் வன்முறைகள்…. காத்திருக்கும் பணியாளர்கள்….சுந்தர் பிச்சை நடவடிக்கை எடுப்பாரா?

கூகுள் நிறுவனத்தில் வன்முறைகள் நடப்பதாக தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

கூகுளின் ஆல்பாபெட் டில் பணியாற்றும் ஊழியர்கள் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். சுமார் 1378 ஊழியர்கள் எழுதிய கடிதத்தில் அலுவலகத்தில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் செய்ததாகவும் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் கடிதத்தில் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஒரு குழுவை செயல்படுத்தும் நபர்கள் தான் இந்தக் கொடுமைகளில் அதிகம் இருக்கின்றனர் என்றும் அவர்களை இது போன்ற உயர் பதவிகளில் வைத்திருக்கக்கூடாது எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அலுவலகம் சார்ந்த கூட்டத்தில் அவர்களுக்குப் பக்கத்தில் அமர வைப்பது போன்ற வன்முறைகள் நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இக்கடிதம் குறித்து தாங்கள் உடனடி நடவடிக்கை  எடுக்க காத்துக் கொண்டிருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |