நாடாளுமன்ற சபாநாயகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
Food prices are skyrocketing. Especially, the price of rice is likely to pass Rs. 400 in the next few weeks, if the government takes no significant measure. Mere price controls haven't and will not work. Serious intervention is necessary to ensure basic food supplies to all.
— Karu Jayasuriya (@KaruOnline) June 13, 2022
அந்தப் பதிவில், உணவு பொருட்களின் விலை வானைத் தொடுகிறது. இதற்கான உரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவில்லை என்றால் ஒரு கிலோ அரிசியின் விலை 400 ரூபாய் வரை அதிகரிக்கும். மேலும் விலைக் கட்டுப்பாடுகள் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்காது என்றும், அனைத்து மக்களுக்கும் சீரான முறையில் உணவு கிடைப்பதற்கான வழிகளை அரசு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.