தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக பட்டுள்ளது. இதனிடையே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகளில் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். மாணவர்களுக்கு சளி, இருமல் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வருகின்றன.