விக்ரம் திரைப்படத்தின் வசூல் அதிகரிப்பதற்கான காரணம் பற்றி தெரிய வந்திருக்கிறது
தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது.
படத்தின் புரமோஷனுக்காக கமல் பெரிய அளவில் விளம்பரம் செய்தார். ஐஎம்டிபி இணையதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் விக்ரம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்தது. இந்நிலையில் படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.
இந்நிலையில் சுவாரசியமான செய்திகள் வெளியாகி வருகின்றது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் விக்ரம் திரைப்படத்திற்காக 60 டிக்கெட்டுகளை வாங்கினார். இவரைப்போலவே ரசிகர்கள் பலரும் அதிக டிக்கெட்டுகள் வாங்குகின்றார்கள். ஒருமுறை திரைப்படத்தை பார்த்தால் போதாது எனக்கூறி மீண்டும் மீண்டும் சென்று பார்க்கின்றனர். இதுவும் பத்தாது என வார இறுதி நாளில் தியேட்டருக்கு சென்று விக்ரம் படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும் நண்பர்களுக்கிடையே போட்டி ஏற்படுகின்றது. நண்பன் ஒருவர் இரண்டு முறை படத்தை பார்த்தால் நான் ஆறு முறை படத்தைப் பார்க்கிறேன் என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். இப்படி போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் திரைக்கு வருவதால் இத்திரைப்படம் மேலும் பல கோடிகளை அள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.