Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… இதை கட்டாயம் கடைபிடிக்கணும்… மீறினால் அபராதம்..!!

பெரம்பலூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் கொரோனா பரிசோதனை இதுவரை 94 ஆயிரத்து 75 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா தொற்று 2,336 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,290 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சுமார் 5 பேருக்கு குறையாமல் மாவட்டத்தில் தற்போது நாள்தோறும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் அதனைத் தடுப்பதற்காக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்களுக்கு வரும் மக்கள், வணிக நிறுவன ஊழியர்கள், பயணிகள், வாகன ஓட்டுநர்கள் ஆகிய அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தலா ரூ. 200 முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வசூலிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |