Categories
தேசிய செய்திகள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை…. இறக்குமதி செய்யப்படவுள்ள நகரும் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவி…. எந்த நாட்டில் இருந்து வருகிறது தெரியுமா….?

ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க ஜெர்மனியிலிருந்து புதிய நடமாடும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதி இல்லாமை ஆகியவற்றால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய மருத்துவ பிரிவு ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்க ஜெர்மனியிலிருந்து நகரும் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை இறக்குமதி செய்து வருகிறது. மேலும் ஜெர்மனியிடம் இருந்து 23 நகரும் ஆக்சிசன் தயாரிக்கும் கருவிகள் கேட்கப்பட்டுள்ளது என்றும் இந்த ஆக்சிஜன் கருவிகள் ஒரு மணி நேரத்தில் 2400 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆக்ஸிஜன் கருவிகள் 20 முதல் 25 நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் இந்த கருவிகள் இந்தியாவுக்கு வர ஒரு வாரம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |