Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனாவால்… ஆர்வத்துடன் வந்து போட்டு கொண்டவர்கள்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இதுவரை 38 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கையில் கொரோனா தடுப்பூசி இதுவரை 38 ஆயிரம் பேர் போட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் 18 ஆயிரம் பேர் ஆவர். மேலும் முன்கள பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் என 20 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது கையிருப்பில் 12 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளது. மேலும் 10 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சிவகங்கை மாவட்டத்திற்கு வழங்கப்பட உள்ளது. தற்போது தடுப்பூசி போடுவதில் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.

மேலும் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று அரசின் உத்தரவின்படி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் சிவகங்கையை அடுத்த அரசு மொழியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் 170 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் பணி புரிபவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இது தவிர கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகளிலும் போடப்படுகிறது. இதில் முதல் முறையாக எந்த தடுப்பூசி போடப்பட்டதோ அதுதான் இரண்டாம் முறையும் போட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறினார்.

Categories

Tech |