கொரோனோ வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஐரோப்பிய நாடுகளில் கட்டாய தனிமைப்படுத்தல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கட்டாய தனிமைப்படுத்துதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அயர்லாந்து சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதில் அனைத்து நாடுகளில் இருந்து அயர்லாந்துக்கு வரும் பயணிகள் ஐந்து நாட்களுக்குள் ஒரு பரிசோதனையை செய்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் அயர்லாந்து விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பயணம் செய்யும் முதல் நாளில் உள்ள பரிசோதனை முடிவை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பங்காளதேஷ், பெர்மூடா, போஸ்னியா, ஆர்மீனியா, உக்ரைன், பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளும் கட்டாய தனிமைப்படுத்துதலை அமல்படுத்தியுள்ளது.