இந்தியாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் இந்தியர்களுக்கு புதிய விதிமுறை ஒன்று விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்ஸிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இந்தியா போக்குவரத்து கட்டுப்பாடுகள் தடையை பல நாடுகள் அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் இரு நாடுகளுக்கும் இடையேயான போக்குவரத்து தொடர்ந்து நடைபெறும் என்றும் இந்தியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு வர அனுமதியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியர்கள் பத்து நாட்கள் தங்களை கட்டாய தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.