Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் தொற்று… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… பெரம்பலூரில் கோர தாண்டவம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனானால் நேற்று 14 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மொத்தம் 2,384 ஆக பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. அதில் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,309 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 53 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |