Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்பு… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் கடந்த 11-ஆம் தேதி 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,346 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |