பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் நேற்று ஒரே நாளில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,558 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஏற்கனவே 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,401 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவுக்கு 133 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.