Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,137 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரிசோதனையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா மருத்துவ பரிசோதனை 1,137 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 128 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 2,588 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |