திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 223 நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 223 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கோவிந்தபுரத்தில் வசித்து வந்த 57 வயது ஆண் ஒருவர் கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றிலிருந்து 194 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு 16 ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி மருத்துவமனையில் 1,603 பேர் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.