Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 2,413 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 2,338 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். மேலும் 53 பேர் அரியலூர், பெரம்பலூர், திருச்சி நகரங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |