பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இது தவிர பெண்கள் கடத்தல், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற வழக்குகளும் அதிகரித்திருக்கின்றது. பாகிஸ்தானில் மனித உரிமைகள் ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின் படி அந்த நாட்டில் தினசரி 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி வருகின்றது. கடந்த ஆறு வருடங்களில் இது போன்ற 22 ஆயிரம் சம்பவங்கள் போலீசாரிடம் புகாராக அளிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் பெண் கான்ஸ்டபிளை சக கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மதியாரி நகருக்கு அருகே உள்ள ஹலா நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்படி சந்தேகத்திற்குரிய குறிப்பிட்ட நபர்களுக்கு எதிரான விசாரணை பற்றிய பணிக்காக தனது அரசு இல்லத்திற்கு வரும்படி ஆண் கான்ஸ்டபிள் பணியாளரான பெண் கான்ஸ்டபிளை அழைத்து இருக்கின்றார். இதனை தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற பெண் கான்ஸ்டபிள் குடிப்பதற்காக ஒரு தேனீர் கோப்பையை கொடுத்திருக்கிறார். தேநீரில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கிறது. இதனால் தேனீரை வாங்கிக் குடித்த அந்த பெண் கான்ஸ்டபிள் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதன் பின் அவரை ஆண் கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல் அதனை பல வீடியோக்கள் ஆகவும் எடுத்து வைத்திருக்கிறார். இதனை அறிந்த பெண் கான்ஸ்டபிள் அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார்.
இந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பியது மட்டுமல்லாமல் தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பிலால் என்ற அந்த ஆண் கான்ஸ்டபிளை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இது குறித்து ஹைதராபாத் சரக டிஐஜி பீர்முகமது ஷா பேசும்போது, சிந்த் மாகாண போலீஸ் வரலாற்றில் முதன்முறையாக பல்வேறு காவல் நிலையங்களில் பெண் அதிகாரிகள் பணி அதிகாரிகள் ஆக்கப்படுகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் அவர்களை ஊக்கமிழக்க செய்யும். மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் சட்டப்படி தண்டிக்கப்படுவார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு விரைவில் நீதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.