கடந்த 2020 ஆம் வருடம் முதல் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது என்றுதான் கூற வேண்டும். இதனால் பல இடங்களில் உடல் நல ரீதியாக மட்டுமின்றி பொருளாதாரரீதியாகவும் அனைத்து நாடுகளும் பாதிப்பினை சந்தித்துவந்தது. அதன் ஒருபகுதியாக இப்போது உலகத்தில் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது. நடுத்தர மக்கள் அனைவரும் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய முடியாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். கடந்த 1981ஆம் வருடத்திற்கு பின் முதன் முதலாக உணவு பொருட்களின் விலைகள் தொடர்ந்து ஓராண்டாக அதிகரித்து வருகிறது.
இதனால் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். முந்தய ஆண்டை ஒப்பிடும்போது முட்டைவிலை 37 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற வருடம் ஜூன் மாதம் 60 முட்டைகள் 670 ரூபாய்க்கு விற்கப்பட்ட சூழ்நிலையில், இப்போது அவற்றின் விலையானது 920 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோன்று மாட்டிறைச்சி 1 கிலோவின் விலை 1030 ரூபாயில் இருந்து 1160 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளையும் இது பாதிப்பினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.