ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாமரைபாடியில் கிருஷ்ணமூர்த்தி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இவருக்கு விக்டோரியா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ஹோட்டல் நடத்தியதில் போதிய வருமானம் இல்லாமல் கிருஷ்ணமூர்த்தி சிரமப்பட்டுள்ளார். மேலும் கிருஷ்ணமூர்த்தி சிலரிடமிருந்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.