அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கழிச்சி குமாரகோவில் கீழ ரதவீதியில் பிரம்மநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கம் காரணமாக பிரம்மநாயகத்திற்கு கடன் பிரச்சினை அதிகமாக இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரம்மநாயகம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரம்மநாயகம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.