விஷம் குடித்து உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் அருகில் காளிபாளையம் படையப்பா நல்லூரில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் ஒரு பனியன் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இவர் தனது தொழிலுக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் இந்த கடனை அவரால் உரிய நேரத்தில் திருப்பி செலுத்தமுடியவில்லை. இதனால் பாண்டியன் சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாண்டியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பெருமாநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.