Categories
மாநில செய்திகள்

அதிகளவு தேர்வு கட்டணம்… மாணவர்கள் புகார்… விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழகம்…!!!

மாணவர்களிடம் அதிக அளவு தேர்வு கட்டணம் வசூல் செய்யப்படவில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதியாண்டு பருவத்தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் மாணவர்கள் அனைவரும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதனால் தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என்று அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது பற்றி அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறி இருப்பது, “நாங்கள் மாணவர்களிடம் அதிக அளவு தேர்வு கட்டணம் வசூல் செய்யவில்லை.

மேலும் 4 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கு ரூ.37.11 கோடி செலவாகும் என்ற மதிப்பில் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டாலும் விடைத்தாள் திருத்தும் பணி மட்டுமன்றி இதர பணிகள் செய்வதற்கு அதிக செலவாகியுள்ளது. மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தை திரும்ப அளித்தால் கட்டாயம் நிதிச்சுமை ஏற்படும்” என்று பதிலளித்துள்ளது.

Categories

Tech |