Categories
அரசியல்

அதிகாரங்களை போராடித்தான் பெறணும்…. என்பதன் அடையாளம் தான் இது…. கமல்ஹாசன்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறுகையில், கிராம சபை கூட்டம் நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என பஞ்சாயத்து தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. இதிலிருந்து, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்களை அதிகாரங்களை போராடித்தான் வெற்றி பெற வேண்டும் என்பதன் அடையாளமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |