சீனா 21 நாடுகளில் 54 வெளிநாட்டு காவல் சேவை மையங்களின் நிறுவியிருப்பதாகவும் அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாகவும் ஸ்பெயினை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பு சமீபத்தில் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது நாடு கடந்த குற்றங்களை சமாளிப்பதற்கும் சீன லைசென்ஸ் கலை புதுப்பித்தல் போன்ற நிர்வாக கடமைகளை மேற்கொள்வதற்கும் இந்த காவல் சேவை மையங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை சீனா ஆட்சிக்கு எதிராக பேசுவதாக சந்தேகிக்கப்படுபவர்களை நாடு திருப்பும்படி கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என கூறப்பட்டிருந்தது.
இதனை அடுத்து தூதராக சேவைகளை வழங்கி வருகிறோம் எனும் பெயரில் சீன போலீஸ் நிலையங்கள் எதிர்பார்பாளர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்து வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது என கூறப்பட்டுள்ளது. மேலும் நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பேசும்போது அதிகாரபூர்வமற்ற காவல் நிலையங்கள் இருப்பது சட்டவிரோதமானது எனக் கூறியுள்ளார்.அதேசமயம் நெதர்லாந்தில் காவல் நிலையங்கள் இருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என நெதர்லாந்தில் உள்ள சீன தூதரகம் கூறி இருக்கிறது.