Categories
உலக செய்திகள்

அதிகாரப் போட்டியினால் நிலவும் போர் பதற்றம்…. பிரதமர் மோடி தலைமையில் புதிய குழு…. மெக்சிகோ அதிபர் பரிந்துரை….!!!!

அதிகார போட்டியின் காரணமாக நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுவதாக அதிபர் லோபஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக சீனா மற்றும் இந்திய எல்லையிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இப்படி நாடுகளுக் கிடையே போர் பதற்றம் அதிகரித்ததற்கு காரணம் நாடுகளுக்கிடையே எழும் அதிகார போட்டி தான் என்று மெக்சிகோ அதிபர் லோபஸ் கூறியுள்ளார். இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அதிபர் லோபஸ், ஐநா சபையினால் கூட அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறியுள்ளார்.

அதன் பிறகு போர் நடைபெறுவதை தடுப்பதற்காக போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஐநா சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியா குத்ரேஸ்  மற்றும் இந்திய பிரதமர் மோடி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும் என லோபஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஐநா சபையில் தான் பரிந்துரை செய்யப் போவதாகவும் லோகஸ் கூறியுள்ளார். மேலும் மூவர் கூட்டணியில் அமையவிருக்கும் குழு கூறும் அறிவுரைகளை சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் லோபஸ் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |