அதிகாரம் இருக்கு என்று நீங்கள் என்ன வேணாலும் பண்ணுவீங்களா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,யிடம்கோவில் திறப்பதில், நாங்கள் தடையை மீறி முன்னேறி செல்வோம் என்பது கலவரத்திற்கு வலுவகுக்காதா ? இதனை சட்டப்படி எதிர்கொள்வதில் என்ன பிரச்சனை ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த அண்ணாமலை,நாங்கள் பொறுமையாக பேசிட்டு இருக்கோம்.
சட்டப்படி நீதிமன்றத்திற்கு போக வேண்டுமா ? போறோம். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ செய்கிறோம் ? உங்கள் கையில் பவர் இருக்கு, அதிகாரம் இருக்கு என்று நீங்கள் என்ன வேணாலும் பண்ணுவீங்க, அதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கனுமா ?
அதிகாரம் கொடுத்திருப்பது மக்களை நன்றாக வழிநடத்துவதற்காக, மக்களுடைய வாழ்க்கையை நன்றாக வைத்துக் கொள்வதற்காக தான் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கு. உங்களுடைய கடவுள் மறுப்பு கொள்கைகாக இல்லை. ஹைகோர்ட் சொல்லியிருக்காங்க… கோவிலுக்கு வெளியே இருக்கின்ற சிலைகளை எடுக்கணும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
கோவிலுக்கு வெளியே கலைஞர் கருணாநிதி அவர்கள் சில சிலைகள் எல்லாம் வைத்திருக்கிறார். அதையும் எடுப்பார்களா ? என்று கேட்டு சொல்லுங்க. இல்ல அந்த ஆர்டர் எல்லோருக்கும் பொருந்துவது தானே, ஒரு உண்மையான அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் கோவிலுக்கு வெளியே வைத்திருக்கும் எல்லா சிலைகளையும் எடுக்கட்டும்.
சும்மா இவங்க70 வருஷமா ஒரு சித்தாந்தத்தை கொண்டு வந்து, ஐம்பது வருடங்களாக ஒரு சிலையை வைத்துவிட்டு, கடவுள் இல்லை என்று சொன்னால் மக்கள் ஏற்று கொள்வார்களா ? அது தனிப்பட்ட கொள்கையாக இருக்கட்டும், அவர் குடும்பத்தில் வைத்துக் கொள்ளட்டும், தவறு கிடையாது. அதை ஆட்சியில் இருக்க கூடிய அதிகாரத்தை பயன்படுத்தி மக்களிடைய பூஜை அறைக்குள், மக்களுடைய கோவிலுக்குள் கொண்டு வராதீர்கள். உங்க ஆட்சியில் பண்ணுங்க. உங்கள் சித்தாந்தத்தை புகுத்தாதீர்கள், மக்கள் விரும்பாத சித்தாந்தங்களை புகுத்தாதீர்கள் என்று தான் நான் கேட்கிறேன்.
மத்திய அரசு சொல்லாத ஒரு கைடு லைனை வைத்து கதை விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். டெஸ்ட்பாசிட்டிவிட்டி 5 சதவீதம் என்று சொன்னதுக்கப்புறம் தர்மபுரி 2.4 இருக்கு, தமிழகத்தில் உயர்வானதே அதுதான். அப்படி இருக்கும்போது கேரளாவில் திறந்துவிட்டார்கள், கர்நாடகாவில் திறந்து விட்டார்கள், மகாராஷ்டிரா திறந்துட்டாங்க. தசராவுக்கு திறந்திருக்கிறார்கள், நவராத்திரிக்கு திறந்து விட்டார்கள். என்ன கதையை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அமைச்சர் ?
ஏனென்றால் ஒரு குடும்பத்திற்கு சேவை செய்ய வேண்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்வார்கள். ஆனால் அவருக்கு ஒரு குடும்பத்தின் சேவையே மகேசன் சேவை என்று தப்பாக புரிந்து கொண்டுள்ளார். அதனால் அவர் எத்தனை கோவிலுக்கு போனாலும் கடவுள் காப்பாற்ற மாட்டார். மக்களுக்கு சேவை செய்யட்டும் எல்லா கடவுளும் காப்பாற்றுவார் என தெரிவித்தார்.