Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் சரமாரியான கேள்விகள்… வசமாக சிக்கிய வாலிபர்… பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்..!!

வாகன  சோதனையின் போது புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஊழலை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீமிசல் பகுதியில்பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது  திருச்சியில் இருந்து வந்த சரக்கு வாகனத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் மற்றும் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின்போது டிரைவரின் பெயர் சங்கர் என்றும், இவர் கோபாலபட்டினம் பகுதியில் உள்ள  ஒருவருக்கு புகையிலை பொருட்களை எடுத்துச் செல்வதாக கூறினார். மேலும் இது குறித்து காவல் துறையினர் கூறும் போது கடத்தி சென்ற புகையிலை பொருட்களின் மதிப்பு 1 லட்சம் இருக்கும் என்றும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |