பள்ளிகளில் இருந்து அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள சேரம்பாடி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகங்களில் அபாயகரமான மரங்கள் இருக்கிறது. இந்நிலையில் பலத்த காற்று வீசும் போது மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதால் அதனை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று கொண்ட ஆர்.டி.ஓ சரவண கண்ணன், பந்தலூர் தாசில்தார் நடேசன் மற்றும் அதிகாரிகள் அபாயகரமான மரங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதனை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் பல்வேறு இடங்களில் இருந்த அபாயகரமான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே ஹில்பங்க் பகுதியில் இருந்த அபாயகரமான மரம் வெட்டப்பட்டதால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.