Categories
உலக செய்திகள்

“அதிகாரிகளின் மெத்தனம்” ஊடுருவிய தீவிரவாதி… பழியில் இருந்து தப்பிக்க முயலும் அரசு…!!!

கிறிஸ்தவ ஆலயத்திற்குள் தீவிரவாதி நுழைந்து தாக்குதல் நடத்தியததற்கு அதிகாரிகளின் மெத்தனம் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாட்டைச் சேர்ந்தவர் Brahim Aouissaoui (21). இவர் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இத்தாலிக்கு வந்தபோது அவரை கைது செய்து ஐரோப்பாவிலிருந்து நாடு கடத்தி இருக்கவேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல் அவரை விடுத்துள்ளார்கள். இது அதிகாரிகளின் மிகப்பெரிய தவறாகும். அதோடு அவருக்கு கொரோனாவும் இருந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் பிரான்சில் நுழைய அனுமதிக்கப்பட்டதையடுத்து தேவாலயத்திற்குள் நுழைந்து 3 பேரை கத்தியால் தலையை துண்டித்து வெறியாட்டம் நடத்தியுள்ளார். ஏற்கனவே இவர் இதுபோன்று 2016ஆம் வருடம் கத்தியுடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக துனிசியா அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து Aouissoui தாய் Gamra கூறுகையில், “என் மகனுக்கு போதைப் பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் இருந்து வந்தது ஆனால் அவன் சமீபத்தில் பக்தி உடையவனாக மாறி விட்டான்”என்றார்.

செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று Aouissaoui  அகதிகளைப் போல இத்தாலிய தீவான Lampedusa   வந்துள்ளார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பதாக சந்தேகப்பட்டதையடுத்து கப்பலில் தனிமைப்படுதப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவர் அக்டோபர் மாதம் எட்டாம் தேதியன்று இத்தாலியில் வந்து இறங்கியபோது கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் ஆனால் துனிசியா அதிகாரிகள் அவர் யார் என்பதை சரியாக தெரிவிக்காததால், அதிகாரிகள் அவனது கைரேகை மற்றும் புகைப்படங்களை மட்டும் வாங்கிக்கொண்டு விடுவித்ததையடுத்து நைஸ் நகருக்கு சென்றிருக்கிறான்.

இந்நிலையில் இந்த சம்பவம் இத்தாலிய உளவுத்துறை மற்றும் துனிசியா  அதிகாரிகள் தங்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்காததால் நடந்தது. எனவே தங்கள் மீது தவறில்லை என இத்தாலிய உள்துறை அமைச்சர் Loosiana கூறியுள்ளார். இவ்வாறு ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறிக்கொண்டு பழியிலிருந்து தப்பிக்க முயல்கிறார்கள். இதிலிருந்து தெளிவாக தெரிவது பாதுகாப்பு விஷயத்தில் பெரிய ஓட்டை என்பது மட்டுமே. எனினும் இவர்களின் தவறால் அநியாயமாக போன உயிர்கள் திரும்ப வரப்போவது கிடையாது.

 

Categories

Tech |