Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய போலி மருத்துவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவி செட்டி குப்பம் மந்தைவெளி கிராமத்தில் நரசிம்மன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நரசிம்மன் தான் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உதவி மருந்தாளராக வேலை பார்த்து வருவதாக கூறி வீட்டில் வைத்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக வேலூர் சுகாதார பணிகள் இணை இயக்குனர் மற்றும் ஊரக நல அலுவலர் ஆகியோருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதனால் அணைக்கட்டு அரசு மருத்துவமனை உதவி மருத்துவர் ஜெயந்தி மற்றும் சுகாதாரத்துறையினர் நரசிம்மனின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது அவர் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தது உறுதியானது. மேலும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நரசிம்மன் 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நரசிம்மனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |