பெரியகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம், பெரியகுளம் பகுதியில் இருக்கும் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய்துறையினர் ஆய்வு செய்தபோது நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானது.
இதனை அடுத்து தாசில்தார் வெள்ளைசாமி தலைமையில் மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வருவாய் ஆய்வாளர்கள் பொதுப்பணி துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.