மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சத்யா கருமத்தம்பட்டி நால்ரோடு அருகே மருந்து கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சத்யா மாத்திரைகள் கொடுப்பதோடு, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சமூக நலத்துறையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடைக்கு சென்று சத்யாவிடம் தனக்கு உடல் வலிப்பதாக கூறியுள்ளார்.
உடனே சத்தியா தான் மருத்துவம் பார்ப்பதாக கூறி மருந்து கொடுத்துள்ளார். இதன் மூலம் போலி டாக்டரான சத்யா பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது உறுதியானது. இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சத்யாவை கைது செய்து விசாரித்தனர். அப்போது பட்டப்படிப்பு மட்டுமே படித்துவிட்டு சத்யா பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதும்