மதுரை மாவட்டத்தில் உள்ள எச்.எம்.எஸ் காலனியில் வசிக்கும் பெண் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஸ்ரீராம் நகரில் ஆட்டோ ஓட்டுநரான காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி யோகமீனாட்சி பள்ளி படிப்பு கூட முடிக்காமல் வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து நோயாளிகளுக்கு மாத்திரை, மருந்து கொடுத்து ஊசி போடுகிறார். இவரால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். எனவே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி மதுரை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செல்வராஜ் தலைமையில் மருத்துவ குழுவினர் நேரில் சென்று விசாரணை நடத்திய போது யோகமீனாட்சி 10- ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு மருத்துவம் பார்த்தது உறுதியானது. இவர் ஒரு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். அதன் மூலம் தெருவில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் யோகமீனாட்சியை கைது செய்து வீட்டிலிருந்த மருந்து மாத்திரை ஊசிகளை பறிமுதல் செய்தனர்.