Categories
மாநில செய்திகள்

“அதிகாரிகளே” உஷாராக இருந்துக்கோங்க…. லஞ்சம் கேட்டால் இப்படித்தான் நடக்கும்….!!!!

லஞ்சம் கேட்ட அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பத்தலப்பள்ளி பகுதியில் ஹரிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாத்தா பெயரில் இருக்கும் சொத்தை தந்தை பெயருக்கு மாற்றுவதற்காக மோரணபள்ளி பகுதியிலிருக்கும் நில அளவையர் வடிவேலுவை சென்று பார்த்துள்ளார். அவர் பட்டாவில்  பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 30,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஹரிநாத் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹரிநாத்திடம் ரசாயனம் கலந்த பணத்தை கொடுத்துள்ளனர்.

இந்த பணத்தை நில அளவையர் வடிவேலுவிடம் கொடுக்குமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். எனவே காவல்துறையினரின் வழிகாட்டுதலின்படி ஹரிநாத் புரோக்கர் தமீஷ் மூலமாக பணத்தை வடிவேலுவிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த காவல்துறையினர் தமீஷ் மற்றும் வடிவேலுவை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |