ஆவணங்கள் வைத்திருந்தும் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு இடைத்தரகர்களின் குறுக்கீடின்றி நியாயமான விலை கிடைக்கவும், விலைப் பொருட்களின் வர்த்தகத்தை முறைப்படுத்தவும் நமது தமிழ்நாடு அரசு 1987-ஆம் ஆண்டு வேளாண் விளைபொருள் விற்பனை என்ற சட்டம் இயற்றியது. 40 வேளாண் விலை பொருட்கள் ஒரே சீரான அறிக்கை செய்யப்பட்டு ஒரு சதவீதம் சந்தை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முந்திரியைப் பொறுத்தவரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முந்திரிகளுக்கு சந்தை கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
ஆனால் அப்படி இறக்குமதி செய்யப்பட்ட முந்திரிகளை உருமாற்றம் செய்து தமிழ்நாட்டில் விற்பனை செய்யும் பட்சத்தில் அந்த வர்த்தக கட்டணம் செலுத்துவதற்கு உட்பட்டது. இதனையடுத்து வேறு மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்க்கோ, ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பரிவர்த்தனை செய்யும்போது கூறிய ஆவணங்கள் வைத்திருந்தால் எவ்வித கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் சில இடங்களில் அதையும் தாண்டி அதிகாரிகள் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்நிலையில் ஆவணங்கள் மற்றும் சந்தை கட்டண ரசீது வைத்திருந்தும் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் குறித்து 7200818155 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் இந்த புகாரை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.