ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதற்காக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சக்கரகோட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. அப்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கபாண்டியன் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மஞ்சன மாரியம்மன் கோவில் அருகே 2 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர்.
இதனைதொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் மற்றும் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த முத்துபாண்டி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக பணமும், வாக்காளர்களின் பெயர்கள் எழுதிய சீட்டும் இருந்துள்ளது. இந்நிலையில் ஆணையாளர் தங்கபாண்டி அந்த 2 பேரை கேணிக்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் முத்துபாண்டி மற்றும் தியாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.