மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் கிடையாது அவர்கள் அரசியல் ஊழியர்கள் என்று மேற்கு வங்க கவர்னர் ஜெகதீஷ் தங்கர் கடுமையாகப் பேசியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேற்கு வங்க கவர்னர் ஜெகதீஷ் தங்கர் ஜனநாயக விதிமுறைகள் மற்றும் மதிப்புகள் சீர்குலைந்து போனதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இங்கு பணிபுரியும் அரசு அதிகாரிகள் அரசு ஊழியர்கள் அல்ல. அவர்கள் அரசியலுக்கு வேலை செய்யும் ஊழியர்கள்.
மேற்கு வங்கத்தின் அரசியலமைப்பின் கீழ் மாநில கவர்னரின் தீர்ப்பு கருத்துக்களை எடுக்கக்கூடியவர்கள் யாருமில்லை என்பதை நான் அதிகாரிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதற்கு முன்னதாக ஐந்து வருடங்களை பாருங்கள் ஏதாவது நடந்ததா? என்று என்னிடம் சொல்லுங்கள். ஜனநாயகம் சீர்குலைந்ததை தவிர வேறு எதையும் கண்டால் நீங்கள் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க கவர்னர் ஜெகதீஷ் தங்களுக்கும் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வரும் சூழ்நிலையில் இவ்வாறு பேசியுள்ளார்.