தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் 38 வருவாய் மாவட்டங்களும் மற்றும் 128 கல்வி மாவட்டங்கள் மூலம் நிர்வாக பணிகள் நடத்தப்படுகின்றனர். அதில் வருவாய் மாவட்டத்தில் சிஇஓ என்ற மாவட்ட முதன்மை அதிகாரிகளும் மற்றும் கல்வி மாவட்டத்தில் விஏஓ என்ற கல்வி அதிகாரிகளும் உள்ளனர். மேலும் இவர்களுக்கு பணி இடம் மாறுதலை கல்வி நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் தங்கள் விரும்பும் இடங்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் அறிமுகப்படுத்தியது.
அதனைப்போலவே நிர்வாக பதவிகளுக்கும் கவுன்சில் அறிமுகப்படுத்தினாள் அதிகாரிகள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து செல்லலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கவுன்சிலினில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் டி.இ.ஓ. தங்கள் சொந்த மாவட்டம் அல்லது சொந்த ஊருக்கு இடங்களை தேர்வு செய்து செல்வதற்கு தடை விதித்துள்ளது என்று பள்ளி கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.