தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அமைச்சரவையில் மாற்றம் நிகழப் போகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தமிழக அமைச்சரவை மாற்றம் இருக்கும். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது. சில துறைகளில் அமைச்சர்களும், அதிகாரிகளுக்கும் இடையே சிறு கருத்து ஏற்படுவதால் துறைரீதியான பணிகளின் வேகம் குறைகின்றது. எனவே அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பாக அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு துறைகளின் செயலாளர்கள், இயக்குனர்கள், மாநகராட்சி ஆணையர்கள் என 12 பேரை தமிழக அரசு இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கலான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கூடுதல் செயலாளராக விஜயலட்சுமி, கூட்டுறவு சங்கங்கங்களின் கூடுதல் பதிவாளராக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக நலன், மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குநராக கார்த்திகா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக ராஜகோபால் கங்கரா நியமிக்கப்பட்டுள்ளனர்.